யாமம் என்பதன் பொருள்நள்ளிரவு
1. சொல் பொருள்
(பெ) நள்ளிரவு,
2. சொல் பொருள் விளக்கம்
நள்ளிரவு,
தமிழர்கள் ஒரு நாளுக்குரிய காலத்தை ஆறு பிரிவுகளாகப் பிரித்தனர்.
அவை,
- காலை,
- நண்பகல்,
- எற்பாடு,
- மாலை,
இது, வைகறை எனப்படும். இவை சிறுபொழுது எனப்படும். ஒவ்வொரு பிரிவும் 4 மணி நேரம் கொண்டது. நாழிகைக் கணக்கில் 10 நாழிகைகளைக் கொண்டது ஒரு சிறுபொழுது. காலை என்பது காலை 6 மணி முதல் 10 மணி வரை. இந்தக் கணக்கில் யாமம் என்பது இரவு 10 முதல் அதிகாலை 2 மணி வரை உள்ள பொழுது. எனவே யாமம் என்பது நள்ளிரவு என்றும் பொருள்படும். இந்த யாமத்தை மூன்றாகப் பகுத்து, முதல், இடை, கடையாமம் என்றனர். அதாவது
10 – 11.20 என்பது முதல்யாமம்.
11.20 – 12.40 இடையாமம் அல்லது நடுயாமம்.
12.40 – 2.00 கடையாமம்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
காலையும் பகலும் கையறு மாலையும் ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ பொழுது இடை தெரியின் பொய்யே காமம் – குறு 32/1-3 காலையும் பகலும் செயலற்ற மாலையும் ஊர் உறங்கும் நள்ளிரவும் விடியலும் என்று இந்தப் பொழுதுகள் இடையே தெரியின் பொய்யானது காமம் இந்தப் பாடலை வைத்துச் சிறுபொழுது ஐந்தே என்பாரும் உளர். ஆனால் ஓர் ஆண்டிற்குரிய பெரும்பொழுது ஆறு என்று கொள்ளும்போது, ஒரு நாளுக்குரிய சிறுபொழுதும் ஆறுதான் எனக் கொள்ளல் தகும். இது ஒரு தமிழ்ச்சொல். அது நாட்டுப்புற மக்களால் சாமம் என்று அழைக்கப்படுகிறது. வடசொல்லான ஜாமம் என்பது வேறு. மூன்று மணி நேர அளவைக் குறிப்பது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்