சொல் பொருள்
(பெ) 1. ஒரு மரம், பார்க்க : யா, 2. நாம்
சொல் பொருள் விளக்கம்
ஒரு மரம், பார்க்க : யா
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
we
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு தன் உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது நிலை உயர் யாஅம் தொலைய குத்தி வெண் நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் – குறு 307/4-8 ஆண்யானை தன் வருந்திய நடையையுடைய இளம் பெண்யானையின் வருத்தத்தைப் பொறுக்கமாட்டாமல் நிற்பதில் உயர்ந்த யா மரம் அழியும்படி குத்தி வெண்மையான பட்டையை உரித்து, தன் துதிக்கையைச் சுவைத்துக்கொண்டு மேல்நோக்கி வருந்திய நெஞ்சத்தோடு முழங்கும் அமிழ்து பொதி செம் நா அஞ்ச வந்த வார்ந்து இலங்கு வை எயிற்று சின் மொழி அரிவையை பெறுக தில் அம்ம யானே பெற்று ஆங்கு அறிக தில் அம்ம இ ஊரே மறுகில் நல்லோள் கணவன் இவன் என பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே – குறு 14 அமிழ்தத்தின் இனிமை பொதிந்துள்ள செம்மையான நாவானது அஞ்சும்படி வந்த நேராக வளர்ந்து ஒளிரும் கூரிய பற்களையுடைய, சில சொல் சொல்லும் பெண்ணைப் பெறுவேனாக நானே! பெற்ற பின்பு அறியட்டும் இந்த ஊரே! வீதியில் நல்லவளின் கணவன் இவன் என்று பலரும் கூற நான் சிறிதே வெட்கப்படுவேன் குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே – நற் 9/12 பல சிற்றூர்களையும் உடையது நாம் செல்லும் இந்த வழி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்