Skip to content

சொல் பொருள்

(பெ) சிங்கத்தின் முகமும், யானையின் தந்தமும்,துதிக்கையும் கொண்ட புராணகால விலங்கு,

சொல் பொருள் விளக்கம்

சிங்கத்தின் முகமும், யானையின் தந்தமும்,துதிக்கையும் கொண்ட புராணகால விலங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a mythical lion-faced animal with elephant like tusks and trunk.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து
அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வுற்று ஆஅங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை – பெரும் 257-260

முகில்கள் விளையாடும் மூங்கில் வளர்கின்ற பக்கமலையில்,
(தம்மை)வருத்துதலையுடைய யாளி தாக்குகையால், பலவும் கூடிக்
கூட்டமான யானைகள் கலங்கிக் கதறினாற் போன்று,
ஆலை ஆரவாரிக்கும் மாறாத ஓசை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *