சொல் பொருள்
(வி) 1. கூறுபடுத்து, 2. வடிவமை, உருவாக்கு, 3. நியமி, ஒதுக்கிக்கொடு, 4. பிள,
சொல் பொருள் விளக்கம்
கூறுபடுத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
separate, divide, frame, formulate, conceptualise, assign, split, tear apart
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் மை ஈர் ஓதி மடவீர் – அகம் 48/17,18 ஐந்துவகையாக வகுத்த கூந்தலையும், அழகிய நெற்றியையும், கரிய நெய்தடவிய கொண்டையினையும் உடைய இளமங்கையரே! அவல் வகுத்த பசும் குடையான் புதல் முல்லை பூப்பறிக்குந்து – புறம் 352/3,4 பள்ளமுண்டாகச் செய்யப்பட்ட பசிய ஓலைக் குடையில் புதரிடத்தே மலர்ந்த முல்லைப் பூக்களைப் பறிக்கும் பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 78 பெரும் புகழ்பெற்ற அரசர்க்குத் தகுந்தவகையில் (அரண்)மனையின் பாகங்களைப் பகுத்துக்கொண்டு எமக்கு என வகுத்த அல்ல – புறம் 378/10 எம்மைப்போலும் பரிசிலர்க்கு அளித்தற்கு என ஒதுக்கப்பட்டாதன ஆன மரல் வகுந்து தொடுத்த செம் பூ கண்ணியொடு – புறம் 264/2 மரலைக் கீறித் தொகுக்கப்பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியுடனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்