சொல் பொருள்
(பெ) 1. மாடுகளால் இழுக்கப்படும் ஒரு வகை வண்டி,
2. மரக்கலம்,
சொல் பொருள் விளக்கம்
மாடுகளால் இழுக்கப்படும் ஒரு வகை வண்டி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of cart pulled by bullocks
ship
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திண் தேர் புரவி வங்கம் பூட்டவும் வங்க பாண்டியில் திண் தேர் ஊரவும் – பரி 20/16,17 அவசரத்தில் திண்ணிய தேருக்குரிய குதிரைகளை வண்டியில் பூட்டவும், வண்டிக்குரிய மாடுகளைப் பூட்டிக்கொண்டு திண்ணிய தேரில் செல்லவும், வங்கம் – பள்ளியோடம் என்னும் வண்டி – பொ.வே.சோ. உரை, விளக்கம் வால் இதை எடுத்த வளி தரு வங்கம் பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து – மது 536,537 வெண்மையான பாய் விரித்த, காற்றுக் கொண்டுவந்த மரக்கலங்கள்(கொணர்ந்த) பலவாய் வேறுபட்ட சரக்குகள் இறங்குதலைச் செய்யும் பட்டினத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்