Skip to content
வசி

வசி –கூர்மை, வயப்படுத்துதல், வாள், சோற்றுத் தட்டு, தட்டு,பிள, வளை, வாழ்,பிளவு

1. சொல் பொருள்

கூர்மை, வயப்படுத்துதல், வாள், சோற்றுத் தட்டு, தட்டு

(வி) 1. பிள, 2. வளை, 3. வாழ்

(பெ) பிளவு,

2. சொல் பொருள் விளக்கம்

கூர்மை, வயப்படுத்துதல், வாள் என்னும் பொருளில் வழங்கும் வசி என்னும் சொல், பரதவர் வழக்கில் சோற்றுத் தட்டு, தட்டு என்னும் பொருளில் வழங்குகின்றது. உழைப்பெல்லாம் ஊணுக்கே என்னும் பழமொழியை நோக்கினால், வசி என்பதற்குச் சோற்றுத் தட்டு என்பதன் பொருள் விளக்கமாகும்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

split, cut apart

bend

Dwell, Reside

cleft, split

4. பயன்பாடு:

அவர் எங்கே வசிக்கிறார்?

5. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு

மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல் – அகம் 322/1,2

விளங்கும் வெயில் மறையவே மேகம் பரந்து மின்னல் பிளந்திட மிக்க மழையைப் பொழிந்த நடு இரவில்

வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 106

வளவிய புகழ் நிறையப்பெற்று, வளைந்து நெளிந்து(உருண்டு திரண்ட) நிமிர்ந்த தோள்களில்

கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்

நெடு வசி விழுப்புண் தணிமார் காப்பு என

அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 302-304

வளைந்த வரிகளைக்கொண்ட)புலி பாய்ந்ததால் (தம்)கணவர் மார்பில்(ஏற்பட்ட) நீண்ட பிளவாகிய விழுப்புண்ணை ஆற்றுவதற்காக, காக்கக்கூடியது என (ஆற்றுக் கருமணல் போல் அலை அலையான)நெறிப்பு உள்ள மயிரினையுடைய (மலை)இடைச்சியர் பாடலோசையும்;

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *