சொல் பொருள்
(பெ) இமயமலை, வேங்கடமலை,
சொல் பொருள் விளக்கம்
இமயமலை, வேங்கடமலை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Mount Himalayas, Mount venkadam
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தென் பௌவத்து முத்து பூண்டு வடகுன்றத்து சாந்தம் உரீஇ – புறம் 380/1,2 தெற்குக் கடலில் குளித்தெடுத்த முத்துமாலை சூடி வடமலையிற் பெற்ற சந்தனத்தை அணிந்து – வடமலை என்றது இமயமலையை. வேங்கடமலையுமாம் – ஔவை.சு.து.உரை, விளக்கம் வடவர் தந்த வான் கேழ் வட்டம் தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 51,52 வடநாட்டவர் கொண்டுவந்த வெண்மை நிற வட்டக்கல் தென் நாட்டு ஓரத்து(பொதிகை மலை) சந்தனத்துடன் (பயன்படாமல்)கிடப்ப; வடவர் தந்த வான் கேழ் வட்டம் குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் – அகம் 340/16-18 வடநாட்டிலுள்ளோர் கொணர்ந்த வெள்ளிய நிறத்தையுடைய வட்டக்கல்லில் குடமலையாயபொதியில் சந்தனக் கட்டையால் பிற மணப் பொருள்களையும் கூட்டி உண்டாக்கிய வண்டுகள் ஒலிக்கும் நறிய சாந்தினை அணிவிப்பேம் என்று தென்புல சந்தனம்தான் விதந்து ஓதப்படும். இந்தத் தென்புல சந்தனத்தை அரைக்க வடவர் தந்த வெண்ணிறக் கல் (பளிங்குக்கல்?) பயன்பட்டதாக அறிகிறோம்.. ஆனால் இந்தப் புறப்பாடலில் வடக்கிலிருந்து சந்தனம் வந்ததாகப் புலவர் கூறுகிறார்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்