சொல் பொருள்
(பெ) இமயமலை,
சொல் பொருள் விளக்கம்
இமயமலை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Mount Himalayas
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தென் குமரி வடபெருங்கல் குண குட கடலா எல்லை தொன்று மொழிந்து தொழில் கேட்ப – மது 70-72 தெற்கே குமரியும், வடக்கே பெரிய இமயமும், கிழக்கிலும் மேற்கிலும் கடல்களும் எல்லையாக உள்ள (வேந்தர்கள்) (தத்தம்)பழைமையான தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக, தென் குமரி வடபெருங்கல் குண குட கடலா எல்லை குன்று மலை காடு நாடு ஒன்றுபட்டு வழிமொழிய – புறம் 17/1-4 தென்திசைக்கண் கன்னியும் வடதிசைக்கண் இமயமும் கீழ்த்திசைக்கண்ணும் மேற்றிசைக்கண்ணும் கடலும் எல்லையாக நடுவுட்பட்ட நிலத்துக் குன்றமும் மலையும் காடும் நாடும் ஒருபெற்றிப்பட்டு வழிபாடு கூற குண குட கடல் என்றாற் போலக் குமரிக்கண் கடல் கூறப்படாமையால் குமரி கடல்கோள்படுதற்கு முன்னையது இப்பாடலென்பது தெளிவாகும் – ஔவை.சு.து.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்