சொல் பொருள்
வடிப்பம் – அழகு, கூர்மை
சொல் பொருள் விளக்கம்
வடிவு – அழகு; வடிக்கப்பட்ட சிற்பம் வடிப்பமாம். கண்டார் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து உள் நிறுத்தத் தக்க வடிவு வடிப்பம் எனப்படும். அவ்வடிவு வடிவைக் குறியாமல் வடிவின் அமைதியாய் அழகைக் குறிப்பது வழக்காயிற்றாம். சிலர் பெயரே வடிவென வழங்குதல் அறிக. ‘வடிவான் மருட்டுதல்’ என்பது வடிவழகால் மயக்குதல் என்பதாம். வடிக்கப்பட்ட வேல் அழகாக விளங்குவதுடன் கூர்மையும் கொண்டிருப்பதால் அதற்குக் கூர்மைப் பொருளும் உண்டாயிற்றாம். வடிவேல் என்பதும் வழங்கு பெயரே.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்