சொல் பொருள்
(பெ) 1. விளிம்பு, 2. நெம்புகோல், 3. முனை,
சொல் பொருள் விளக்கம்
விளிம்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
border edge, lever, extremity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி – மது 588 நெடிய தொடராகவுள்ள குவளை மலர்களை வடிம்பிலே விழும்படி செருகி வடிம்பு – ஈண்டு அடிகளின் விளிம்பு – பொ.வே.சோ உரை விளக்கம் களிறு கடைஇய தாள் மா உடற்றிய வடிம்பு சமம் ததைந்த வேல் – பதி 70/1-3 களிறுகளைச் செலுத்திய கால்களையும், குதிரைகளைப் போரிடுவதற்குச் செலுத்திய காலின் விளிம்பினையும், பகைவரின் போரைச் சிதைத்த வேலினையும், – குதிரை மேலிருந்து பொரும் குதிரை வீரர் தம் தாளின் (காலின் அடிப்பகுதி) அக விளிம்பால் அவற்றிற்குத் தம் குறிப்பை உணர்த்திச் செலுத்துபவாகலின் அச் சிறப்பு நோக்கி மா உடற்றிய வடிம்பு என்றார். வடிம்பு – தாளின் விளிம்பு – ஔவை.சு.து.உரை விளக்கம். கடு மா கடைஇய விடு பரி வடிம்பின் நல் தார் கள்ளின் சோழன் கோயில் – புறம் 378/4,5 கடுகிச் செல்லும் குதிரையைச் செலுத்தற்கென்று காலில் இடப்பெற்ற பரிவடிம்பு என்னும் காலணியும் நல்ல தாரினையும், கள்ளினையுமுடைய சோழவேந்தனின் அரண்மனை – பரி வடிம்பு – குதிரை இவர்ந்து செல்பவர் அதனை விரையச் செலுத்தற்பொருட்டுக் காலில் அணியும் இரும்பு; இது வடிம்பு போறலின் வடிம்பு எனப்பட்டது. – ஔவை.சு.து.உரை,விளக்கம் ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு – கலி 103/43 எருமைக்கடாவில் வருகின்ற கூற்றுவனின் நெஞ்சத்தைக் கால்நுனியால் பிளந்திட்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்