சொல் பொருள்
வட்டம் – தன் சுற்றத்தார் வீடுகள்.
வளசல் – தன் உறவினர் வீடுகள்.
சொல் பொருள் விளக்கம்
முற்காலத்தில் பங்காளிகள் ஒரு வட்டமாகவும் அவர்கள் காலத்தில் உறவினர்கள் அடுத்தடுத்து வட்டம் வட்டமாக அமைந்திருக்க வாய்த்தது. ஆதலால் தம்மை அடுத்தாரை வட்டமாகவும், அவரை அடுத்திருப்பாரை வளசல் ஆகவும் கருதினர். நகர வாழ்க்கையில் வட்டம் வளசல்களுக்கு இடமில்லையாம். வட்டம் – வட்டகை எனவும் வளசல் – வளைவு எனவும் வழங்கும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்