சொல் பொருள்
வண்டவாளம் – தன்மை கெட்ட செயல்கள்
சொல் பொருள் விளக்கம்
“உன் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றுகிறேனா; இல்லையா! பார்!” என்பது எரிச்சல் வெளிப்பாடு. இதில் வண்டவாளம் என்பது தகுதியில்லாத செயல்கள் தண்டவாளத்தில் ஏற்றல் என்பது ஊரறியப் பரப்புதல். தண்டவாளத்தில் என்பது தொடர்வண்டியில் செய்தித்தாள் அனுப்புவது போல அனுப்புவதாம். இன்றும் அஞ்சல்கள் உள் நாட்டளவில் தொடர் வண்டியில் போதலே நடைமுறை. பேருந்து வாராக் காலத்தில் தொடர் வண்டி வழியாகவே செய்தித்தாள்கள் அனுப்பப்பட்டன. அந்நாளை வழக்குச் சொல் ஈதாம். வண் – வண்ட – என்பவை வளமான செய்திகள். அவை தகுதி கெட்ட செய்திகள். வாளம் – நெடுமை வாலம் என்பதும் அதுவே.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்