சொல் பொருள்
வண்ணங்கொடுத்தல் – பொய்யை மெய்யாக்கல்
சொல் பொருள் விளக்கம்
பூசுதல் போல்வது வண்ணங் கொடுத்தல். வண்ணங்குலைந்த பொருள்களை வண்ணமேற்றிப் புதிதுபோல் காட்டி ஏமாற்றி வருதல் இந்நாளில் பெருக்கமாம். வண்ணங்கொடுத்தலால் நல்ல எண்ணங்கொடுத்து ஏமாறச் செய்வது ஒரு கலைத் தொழிலாகவே போகி விட்டது. அது குற்றச் செயல் என்னும் எண்ணமே இல்லாத நிலையில் பெருக்கத்தை அன்றிச் சுருக்கத்தை அடையாதே! புலவர் வண்ணங் கொடுக்கும் வண்ணிப்பு பொழுது போக்காக அமையும். இவ் வண்ணங் கொடுப்பு, பொருள் போக்காக மட்டுமா அமைகின்றது? உயிர்ப்போக்காகவும் கூட அமைந்து விடல் உண்டு. வண்ணங்கொடுத்தல் ‘பாலிசு செய்தல்’ என்னும் ஆங்கில வழிப்பட்டதாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்