சொல் பொருள்
(பெ) கையில் தோளின்கீழ் அணியப்படும் ஆபரணம்,
சொல் பொருள் விளக்கம்
கையில் தோளின்கீழ் அணியப்படும் ஆபரணம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
armlet
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள் சோர்ந்து உகு அன்ன வயக்கு_உறு வந்திகை – மது 414,415 ஒழுங்குபட்ட வாயையுடையவரும்; வளைந்த மூட்டுக்களையுடைய மூங்கில்(போன்ற) தோளினையும், நெகிழ்ந்து விழுந்துவிடுவது போன்ற மின்னுகின்ற கைவந்திகைகளையும் – கைவந்தி – ஒரு மகளிர் அணி;ஆடையுமாம். தோள்வந்தி – என இக்காலத்தே (தோவந்தி) மகளிர் மேலாடையை வழங்குதலுண்டு – பொ.வே.சோ உரை, விளக்கம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்