சொல் பொருள்
(வி.மு) 1. வருவாயாக, 2. வந்தேன், வந்திருக்கிறேன்,
சொல் பொருள் விளக்கம்
வருவாயாக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(please) do come
I have come
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எமக்கு நயந்து அருளினை ஆயின் பணை தோள் நன் நுதல் அரிவையொடு மென்மெல இயலி வந்திசின் வாழியோ மடந்தை – ஐங் 175/1-3 எனக்குக் கனிவோடு அருள்செய்வதென்றால், மூங்கில் போன்ற தோளையும் நல்ல நெற்றியையும் கொண்ட உன் தோழியோடும் மெல்ல மெல்ல நடந்து வருவாயாக, வாழ்க மடப்பமுள்ள நங்கையே! கொடியோர் நல்கார் ஆயினும் யாழ நின் தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர் உவ காண் தோழி அ வந்திசினே – குறு 367/1-3 கொடியவரான தலைவர் நமக்கு நல்மணத்தைத் தரமாட்டாரெனினும், உன்னுடைய தோள்வளை விளங்கும் இறங்கிவரும் தோள்கள் அழகுபெறும்படி இன்னும் சற்றுத்தொலைவுக்கு அங்கே வருவாயாக தோழி! ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார் உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல் – பதி 64/13-15 ஞாயிறு உதிப்பதைப்போல், பகைவரின் மிகுந்த பகையைச் சிதைத்த உன் வலிய கால்களை வாழ்த்திக் காண்பதற்கு வந்திருக்கிறேன் – காலில் கழலையும், தோளில் தொடியையும் அணிந்திருக்கும் அண்ணலே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்