சொல் பொருள்
(வி.மு) வருவாய்,
சொல் பொருள் விளக்கம்
வருவாய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(you) come
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த ஓரி புதல்வன் அழுதனன் என்பவோ புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால் வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/1-5 “விரல்களால் கோதப்பட்டு, அலையலையாக, பெரிய முதுகுப்பக்கம் விழுந்துகிடக்கிற நீண்ட தலைமுடியை உடைய ஆண்மகன் அழுதுகொண்டிருந்தான் என்கிறார்களோ, புதிய மலர்களைச் சூட்டி, எம் சுற்றத்தார் என் பெயரைச் சொல்லி, திருமண ஏற்பாடுகளைச் செய்வாரைக் கண்டு? ‘அறிவு கெட்ட கோழையே’ என்று பெரிதாகச் சிரித்துவிட்டு வருவாய் நீ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்