சொல் பொருள்
வந்தேறி – அயல்நாட்டில் இருந்து வந்தவர்
சொல் பொருள் விளக்கம்
வந்து ஏறுபவர் வந்தேறி எனப்படுவர். வருதல் நாடு தாண்டி நாடு வருதல். ஒரு நாட்டார் மற்றொரு நாட்டிற்கு உரிமை பெறாமல் வருவதும், வந்து நிலைமக்களாகத் தங்கி விடுவதும் ‘வந்தேறி’ எனப்படுகின்றதாம். நிலைமக்களாக இருப்பவரையும் வந்தேறிகளாக அலைமக்கள் ஆக்கி விடுவர் என்பதற்கு ஈழநாட்டு நிலை எடுத்துக்காட்டாம். வந்தேறிகள் நிலை மக்களாவதற்கு அமெரிக்க, ஆபிரிக்க, ஆஸ்திரேலிய நாட்டு ஆட்சியுடையாளர் சான்றாவர். வருதல் இருத்தல் ஆகியது, வந்தேறுதல் எனப்படுவது குடியேறுதல், குடியேற்றம் போன்ற வழக்காம். குடியேற்றம் ஓர் ஊர்ப் பெயர்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்