சொல் பொருள்
1. (வி) 1. உருவமை, வடிவமை, 2. சித்திரமெழுது, 3. பதி,
2. (பெ.அ) அழகிய
சொல் பொருள் விளக்கம்
உருவமை, வடிவமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
form, shape, draw, paint, infix, inlay, beautiful
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வனை கல திகிரியின் குமிழி சுழலும் – மலை 474 (குயவர்)மட்பாண்டங்கள் வடிவமைக்கப் பயன்படுத்தும் கருவியின் சக்கரத்தைப் போல நீர்க்குமிழி சுழலும், வனை புனை எழில் முலை வாங்கு அமை திரள் தோள் – மலை 57 கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட அழகிய முலையையும் வளைவுள்ள மூங்கில்(போன்ற) திரண்ட தோளையும் யான் தன் வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என – நற் 29/6,7 தன்னுடைய தொய்யில் வரைந்த உயர்ந்த இளமுலைகள் நோவுமே எனக் கருதி காம்பின் வனை கழை உடைந்த கவண் விசை கடி இடி கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது – அகம் 309/12-14 மூங்கிலின் அழகிய தண்டு உடைதற்கு ஏதுவாய், கவண் கல்லின் வேகம் தங்கின கடிய தாக்குதலை உடைய வெப்பம் மிக்க கதிர்களையுடைய பகற்பொழுதில் செல்லாமல் – நாட்டார் உரை பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த கூழை நெய்தலும் உடைத்து இவண் தேரோன் போகிய கானலானே – குறு 227 புதிய வளையத்தைப் பதித்ததைப் போன்ற பொன் விளிம்பினையுடைய சக்கரங்களின் வாளைப் போன்ற முகம் துண்டாக்கியதால் கொழுத்த இதழ்கள் குறைப்பட்டு மூளியாகிப்போன நெய்தலை உடையது, இங்கே தேரில் வந்தவன் சென்ற கடற்கரையில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்