சொல் பொருள்
(பெ.அ) 1. வலிய, 2. கடிய, 3. கடுமையான 4. வலிதாக ஏற்படுத்தப்பட்ட, செயற்கையான,
சொல் பொருள் விளக்கம்
வலிய,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strong, stern, severe, intense, artificial
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை – பெரும் 170 விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும் உவலை கண்ணி வன் சொல் இளைஞர் சிலை உடை கையர் கவலை காப்ப – மது 311,312 தழை விரவின கண்ணியினையும் கடிய சொல்லினையுமுடைய இளைஞர் வில்லையுடைய கையை உடையராய்ப் பல வழிகள் கூடுமிடத்தே காவல்காக்க பெரும் கை தொழுதியின் வன் துயர் கழிப்பி – பதி 76/6 பெரிய கைகளைக் கொண்ட கூட்டமான யானைகளின் கடுமையான துயரத்தைப் போக்கி, இன்புற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும் – பரி 28/2 அந்த உறவினால் இன்புற்றதால் ஏற்பட்ட இயற்கை அழகும், செயற்கை அழகும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்