Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கொடுமை, இரக்கமின்மை, 2. கடுமை, 3. வீரத்தனமை, மனவுரம்,

சொல் பொருள் விளக்கம்

கொடுமை, இரக்கமின்மை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cruelty, heartlessness, sternness, Bravery, fortitude

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர் – குறு 274/3,4

விடுவதற்கான அம்பினை வில்லோடும் கையினில் பற்றி, அந்த மரத்தின் கிளைகளில் ஏறி
 வழியில் வருவோரைப் பார்க்கும் கொடுமைமிக்க ஆடவர்

வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 61

வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்

வாள் தோள் கோத்த வன்கண் காளை – நெடு 182

வாளைத் தோளில் கோத்த தறுகண்மையையுடைய காளைபோன்றவன்
– நச். உரை
– தறுகண்மை – அஞ்சாமையையுடைய வீரம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *