சொல் பொருள்
(பெ) 1. ஆண்மை, 2. ஆற்றல், திறன்,
சொல் பொருள் விளக்கம்
ஆண்மை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
manliness, fortitude
ability
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர் இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என சொல்லிய வன்மை தெளிய காட்டி சென்றனர் வாழி தோழி – குறு 283/1-4 இருக்கின்ற பொருளைச் செலவழிப்போர் செல்வமுடையோர் எனப்படார்; பொருள் இல்லாதவர் வாழ்க்கை இரந்து வாழ்வதனினும் இழிவானதாகும் என்று சான்றோர் சொல்லிய ஆண்மைச் சால்பினை புரியும்படி எடுத்துக் காட்டிச் சென்றுவிட்டார், வாழ்க, தோழியே! நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது முன்னம் முகத்தின் உணர்ந்து அவர் இன்மை தீர்த்தல் வன்மையானே – புறம் 3/25,26 நின்பால் நச்ச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர், அங்ஙனம் வருவது அவர் மனக்குறிப்பை அவர் முகத்தால் அறிந்து, அவருடைய வறுமையைப் போக்குதலை வல்ல தன்மையால்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்