சொல் பொருள்
(வி) 1. ஒளிர், சுடர்விடு, 2. விளங்கு, பிரசித்தமாகு, 3. (ஒரு செயல்) முற்றுப்பெறு, 4. தெளி, 5. மிகு, 6. பொலிவுபெறு,
சொல் பொருள் விளக்கம்
ஒளிர், சுடர்விடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shine, glitter, become renowned, illustrious, accomplish (a job), become clear, lucid, abound, become resplendent, radiant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வசை இல் புகழ் வயங்கு வெண் மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் – பட் 1,2 பழிச்சொல் இல்லாத புகழையுடைய, சுடர் வீசும் வெள்ளியாகிய மீன் (தான் நிற்பதற்குரிய)வடதிசையினின்றும் மாறி தென்திசையில் சென்றாலும் வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் – கலி 2/21 அருந்ததி போல் வணங்கி வழிபடக்கூடிய பிறரால் போற்றுதற்குரிய கற்பினையுடைய இவளின் வயங்கிய – பிறரால் போற்றுதற்குரிய – இராசமாணிக்கனார் உரை செய்யப்படும் பொருள் முற்றாதாயினும் இன்பப் பயன் கெடுமாறு அதனையே பெரிதாக எண்ணி அங்கேயே தாழ்த்துவிடார் – நாட்டார் உரை செய்பொருள் வயங்காது ஆயினும் பயம் கெட தூக்கி நீடலர் வாழி தோழி – அகம் 333/6-8 அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய உரை சால் வேள்வி முடித்த கேள்வி அந்தணர் அரும் கலம் ஏற்ப – பதி 64/3-5 அறநூல்களை ஓதியதால் தெளிவான நாவினையுடைய, உயர்ந்த புகழ் நிறைந்த வேள்விகள் செய்து முடித்த கேள்வியறிவையுடைய அந்தணர்கள் அரிய கலன்களை நீர் வார்க்க ஏற்றுக்கொள்வதால், வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் – நற் 142/1 வானமே இறங்கியதைப் போன்று பொழிந்த மிகுதியான மழையின் கடைசி நாளில் வயங்கு எழில் யானை பய மலை நாடனை – கலி 43/22 பொலிவுள்ள அழகுடைய யானைகளையுடைய பயன் மிக்க மலையைச் சேர்ந்தவனைப் பற்றி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்