Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வலிமை,  2. வயாநோய், மசக்கைநோய், 3. பிரசவ வலி, 4. அன்பு, காதல், ஆசை, 

சொல் பொருள் விளக்கம்

வலிமை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

strength, prowess, languor during pregnancy, Pains of child-birth, love, affection, desire

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழி-தொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 127,128

வலிமையுள்ள பெண்யானையின் முழங்காலைப் போன்று, குழிகள்தோறும்,
சிறந்த நிலையில் (நிலத்தடியில்)வளர்ந்தன, செழுமையான கொடியையுடைய கவலை எனும் கிழங்கு;

கரும் கால் அன்றில் காமர் கடும் சூல்
வயவு பெடை அகவும் பானாள் கங்குல் – குறு 301/3,4

கரிய கால்களைக் கொண்ட ஆண் அன்றிலை, அது விரும்பும் முதிய சூல்கொண்ட
மசக்கைநோயால் வாடும் பெண் அன்றில் அழைக்கும் நடுராத்திரியாகிய இரவில்

வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது
பகைவர் உண்ணா அரு மண்ணினையே – புறம் 20/14,15

மசக்கைநோய் கொண்ட பெண்கள் ஆசைப்பட்டுத் தின்றால் ஒழிய
பகைவர் கைப்பற்றமுடியாத பெறுதற்கரிய மண்ணையுடையை

ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி – அகம் 112/5

குட்டியை ஈன்ற அண்மையினையுடைய பிரசவ வலியினையுடைய பெண்புலி பசித்ததாக

புனை வினை பொலம் கோதையவரொடு
பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார்
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்பு_உற – பரி 11/65-68

புனைந்த தொழிலையுடைய பொன்னால் செய்யப்பட்ட கழுத்துமாலைகளை அணிந்த மகளிரோடு
பாகு தங்கிய இளம் கள்ளைப் பருகி, களிப்பு மிகுந்து,
நல்ல செல்வத்தைத் தருகின்ற அறச்செயல்களைச் செய்த நாகர்களைப் போன்று இன்பநாட்டம் மிக,
நெருங்கிச் சேரும்பொருட்டு
அழகாகிய மதுவை ஒருவருக்கொருவர் கண்களாலேயே கவர்ந்து பருகும்படியாக,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *