சொல் பொருள்
வரிதல் – எழுதுதல், கட்டுதல்
சொல் பொருள் விளக்கம்
வரி என்பது கோடு, வரிதல் எழுதுதல் பொருளது. “என்ன வரிகிறாய்?” வரிந்து தள்ளுகிறாயே எதை?” என்பவற்றில் வரிதல் எழுதுதல் பொருளாதல் அறிக. வரிந்துகட்டு, வரி என்றால் இறுக்கிக் கட்டுதல், இறுக்கு என்பவை பொருள். வேட்டியை வரிந்து கட்டுதல் வரிதல் எனப்படும். வரிதல் இறுக்கிக் கட்டுதல் என்னும் பொருளதே. ‘கட்டாயம் என்பது கண்டிப்பாகச் செலுத்த வேண்டிய வரி என்பதே. அதில் இருந்தே தீரா நிலையில் நிறைவேற்றியாக வேண்டிய செயல் ‘கட்டாயம்’ எனப்பட்டதாம். அரசிறை எனப்படும் ‘வரி’யைத் தவிர்த்தலாகாது என்பதை விளக்குவது கட்டாயச் சொல்லாம். கட்டு + ஆயம் = கட்டாயம். கட்ட வேண்டும் வரிப்பணம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
தாங்கள் அறியாதது ஒன்றும் இல்லை, ஆயினும் சொல்கிறேன்.செயலி (app) இருந்தால் … ககபோ வாக இருக்கும்