Skip to content

சொல் பொருள்

(வி) தடவிக்கொடு, கோது,

சொல் பொருள் விளக்கம்

தடவிக்கொடு, கோது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

stroke gently, caress lightly, fondle, massage

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 151

மென்மையான தன்மையினை உடைய சேடியர் (தலைவியின்)நல்ல அடியை மென்மையாக அமுக்கிவிட

ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் – அகம் 306/4,5

காய்த்த மாமரத்தின் இளம் தளிர் தடவிக்கொடுக்க
மீனை உண்ட நாரை துயிலும் நீர் சூழ்ந்த வளம்பொருந்திய வயலிடத்தே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *