சொல் பொருள்
(பெ) வரைவுகொள்ளுதல், தடைசெய்யல், தடுத்தல்,
சொல் பொருள் விளக்கம்
வரைவுகொள்ளுதல், தடைசெய்யல், தடுத்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
forbidding
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோள் அறியா சொன்றி நிரை கோல் குறும்_தொடி தந்தை ஊரே – குறு 233/4-7 பெரியவர்களுக்கு நீருடன் சொரிந்து மிஞ்சிய பொருளையும், எல்லாருக்கும் வரையறுத்துக்கொள்ளுதலை அறியாத சோற்றினையும் உடைய வரிசைப்பட்ட திரண்ட குறிய வளையலையுடையவளின் தந்தையின் ஊர் உண்மரும் தின்மரும் வரைகோள் அறியாது குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு அடை சேம்பு எழுந்த ஆடு_உறும் மடாவின் எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும் கண்டு மதி மருளும் வாடா சொன்றி – பதி 24/18-22 உண்பாரும், தின்பாருமாய் வரைவுகொள்வதை அறியாது உண்டும் ஒலிக்கின்ற பூண் மழுங்கிப்போன உலக்கை இருக்கும் இடங்கள்தோறும் இலையையுடைய சேம்பினைப் போன்ற அடுப்பிலிடப்பட்ட பெரிய பானையினையும், வாளால் இறைச்சியை வெட்டும்போது சிவந்துபோன வெட்டுமரத்தையும் யாவரும் கண்டு வியக்கும் – குறையாத சோறு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்