சொல் பொருள்
(பெ) 1. உலகம், 2. எல்லை, 3. சுவர்/வேலி சூழ்ந்த இடம்/வீடு, 4. மதில், 5. மாளிகை,
சொல் பொருள் விளக்கம்
உலகம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
world, limit, boundary, enclosed space/house, wall of a fort or temple, mansion
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என – பரி 11/80 வெம்மையால் வாடாது இருக்கட்டும் இந்த அகன்ற நிலவுலகம் என்று இன்னா செயினும் இனிது தலையளிப்பினும் நின் வரைப்பினள் என் தோழி தன் உறு விழுமம் களைஞரோ இலளே – குறு 397/6-8 இன்னாதவற்றைச் செய்தாலும், இனியவற்றை அளித்தாலும் உன் எல்லைக்குட்பட்டவளே என் தோழி! தானுற்ற மிக்க துன்பத்தைக் களைவார் அவளுக்கு இல்லை. உதள நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில் கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும் இடு முள் வேலி எரு படு வரைப்பின் – பெரும் 151-154 ஆட்டுக்கிடாயின் நெடிய தாம்புகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முற்றத்தில், வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும் கட்டு முள் வேலியினையுடைய எருக்குவியல்கள் மிகுந்திருக்கும் வேலி சூழ்ந்த இடத்தில் அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய – பட் 269 அரிய காவலையுடைய மதிலையுடைய பகைவரின் படைவீடுகள் அழகு அழியவும் துறை விட்டு அன்ன தூ மயிர் எகினம் துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில் – அகம் 34/12,13 ஆற்றுத்துறையில் அலசிவிடுவது போன்ற தூய வெண்மையான மயிர்களையுடைய அன்னங்கள் தம் பெடைகளுடன் விளையாடி மகிழும் காவல் உள்ள மனையகத்தில்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்