சொல் பொருள்
(பெ) பார்க்க : வறம்
பஞ்சம், வற்கடம், வறுமை, வறண்ட நிலம், வறட்சி, பட்டுப்போன மரம், காய்ந்துபோதல்
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : வறம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
famine, poverty, parched land, drought, dried up tree, getting dried up
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வறம் – பஞ்சம், வற்கடம், famine எல்லை தருநன் பல் கதிர் பரப்பி குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் அருவி மா மலை நிழத்தவும் மற்று அ கருவி வானம் கடல் கோள் மறப்பவும் பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் – பொரு 233-237 பகற்பொழுதைத் தருகின்ற ஞாயிறு பலவாகிய கதிர்களைப் பரப்புகையினால், கஞ்சங் குல்லை தீயவும், மரங்களின் கொம்புகளை நெருப்புத் தின்னவும், அருவிகள் — பெரிய மலைகளில் — கொஞ்சம் கொஞ்சமாக வற்றிப்போகவும், இவை ஒழிந்த 235 கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும், பெரும் பஞ்சம் உண்டாகிய நற்குணமில்லாத காலத்தும் வறம் – வறுமை, poverty வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த – நற் 90/3 வறுமை இல்லாத சலவைப்பெண், பகலில் வெளுத்த வறம் – வறண்ட நிலம், parched land ஞாயிறு கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின் உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம் வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/2-5 ஞாயிறு மிகுந்த அனல் பரக்கும் கதிர்களைச் செலுத்திக் காய்கின்ற வெப்பத்தால் சுடுதலால் வண்டுகள் நெருங்கிச் சேர, ஒழுகுகின்ற கமழும் மதநீரையுடைய, இப்பொழுது கெட்டுப்போன அழகையுடைய யானை வறண்ட நிலத்தை உழுகின்ற கலப்பையைப் போல் தன் கொம்புகளை ஊன்றி நிலத்தில் கிடக்க, வறம் – வறட்சி – drought வறன்_உறு குன்றம் பல விலங்கினவே – அகம் 109/15 வறட்சியுற்ற குன்றுகள் பல குறுக்கிட்டுள்ளனவே வறம் – பட்டுப்போன மரம், dried up tree வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் – அகம் 49/11,12 பட்டுப்போன மரநிழலில் தங்கி, தலையை மேல்நோக்கிப் பார்த்து வருந்தும் இளையமானின் தளர்வுற்ற கூட்டம் வற்றிய மரல் செடிகளைச் சுவைக்கும் வறம் – காய்ந்துபோதல், getting dried up வறன்_உறல் அறியா சோலை – அகம் 382/12 காய்ந்துபோதலை அறியாத சோலை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்