சொல் பொருள்
(பெ) 1. வலக்கையில் உடையவர், 2. வெற்றியுடைவர்,
சொல் பொருள் விளக்கம்
வலக்கையில் உடையவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
those who held s.t in the right hand
victorious men
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மண்ணுறு முரசம் கண் பெயர்த்து இயவர் கடிப்பு உடை வலத்தர் தொடி தோள் ஓச்ச – பதி 19/7,8 நீராடி வார்க்கட்டமைக்கப்பட்ட முரசத்தின் கண்ணில் குருதி பூசி, முரசு முழக்கும் வீரர் கடிப்பினை வலக்கையில் ஏந்தியவராய் தொடி அணிந்த தம் தோளோச்சிப் புடைத்து முரசினை முழக்க முன்னிய செய்_வினை வலத்தர் ஆகி இவண் நயந்து எய்த வந்தனரே தோழி – அகம் 363/15-17 தாம் கருதிச் சென்ற பொருளீட்டும் தொழிலில் வெற்றியுடையர் ஆகி நம்மை விரும்பி இங்கே வந்து சேர்ந்தனர் தோழி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்