Skip to content

வலைவீசுதல்

சொல் பொருள்

வலைவீசுதல் – அகப்படுத்துதல்

சொல் பொருள் விளக்கம்

வலைவீசுதல் என்பது மீன்பிடிப்பதற்காகச் செய்யப்படுவது. வலைவீசல், வலைபோடல், தூண்டில் போடல் என்பனவும் மீனை அகப்படுத்துவதற்கு அல்லது சிக்கவைப்பதற்குச் செய்யும் செயலேயாம். அதே போல் ஒருவர் தாம் விரும்பிய ஒருவரை அகப்படுத்துதற்குச் செய்யும் முயற்சி சூழ்ச்சி – பேச்சு- கண்ணோக்கு என்பவை வலைவீசுதலாக வழக்கில் சொல்லப்படும். வலைவிரித்தல் என்பதும் அகப்படுத்தி எடுத்துக்கொள்ளும் முயற்சியையே குறிக்கும். நேரிய வழியால் அகப்படுத்துதலை, வலைவீசுதல் என்னும் வழக்கம் இல்லை.

இது ஒரு வழக்குச் சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *