சொல் பொருள்
(ஏ.வி.மு) வல்லவனாயிருக்கவேண்டாம்,
சொல் பொருள் விளக்கம்
வல்லவனாயிருக்கவேண்டாம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
don’t be capable of doing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல்லா கோவலர் கோலின் தோண்டிய ஆன் நீர் பத்தல் யானை வௌவும் கல் அதர் கவலை செல்லின் மெல் இயல் புயல்_நெடும்_கூந்தல் புலம்பும் வய_மான் தோன்றல் வல்லாதீமே ஐங் 304 கல்வியறிவில்லாத இடையர்கள் தம் கையிலுள்ள கோலினால் தோண்டிய பசுக்களுக்கான நீரையுடைய பள்ளத்தில் உள்ள நீரை யானை கவர்ந்து குடிக்கும் பாறைகள் நிரம்பிய பலவகையாய்ப் பிரிந்து செல்லும் பாதையின் வழியே சென்றால், மென்மையான இயல்பினையுடைய மேகத்தைப் போன்ற கரிய நீண்ட கூந்தலையுடைய இவள் தனிமையில் வாடுவாள், வலிமையான குதிரையையுடைய தலைவனே! நீ பிரிந்துசெல்லுதல் வல்லையல்லை ஆகுக. – மெல்லியல் என்றதால், மெல்லியோர் புலம்ப ஒரு செயலை வல்லுநர் செய்வது வன்மையாகாது என்பாள் வல்லாதீமே என்று கூறினாள். – ஔவை.சு.து.விளக்கம் எக்கர் ஞாழல் பூவின் அன்ன சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமோ – ஐங் 149 மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தின் பொன்னிறப் பூவைப் போன்ற அழகுத்தேமல் படர்ந்திருக்கும் இளமையான முலைகள் உள்ள தலைவிக்கு முதலில் அழகைப் பெருகச் செய்து, பின்னர் பிரிந்து செல்லல் மாட்டீராக! வல்லாதீ முன்னிலை வினையின் ஈறு நீண்டது. வரவிடை வைத்துப் பிரிதல் பயின்று வல்லோயாயினை யாகலின், பிரியின் அஃது இவட்கு வருத்தம் உறுவிக்கும் என்பாள் அகறல் வல்லாதீமோ என்றாள். – ஔவை.சு.து.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்