Skip to content

சொல் பொருள்

(வி.அ) 1. விரைந்து சென்று, 2. சிரமப்பட்டு,

சொல் பொருள் விளக்கம்

விரைந்து சென்று,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

going quickly

with great effort

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்
வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே
செல்க என விடுநள்-மன்-கொல்லோ – நற் 68/5-7

பொங்கி வருகின்ற புது நீரில் மனம் மகிழ ஆடுவோம்;
இதனை விரைந்து சென்று அன்னையை வணங்கிச் சொல்லுபவரைப் பெற்றால்
செல்லுங்கள் என்று அனுப்பிவிடுவாளோ?

– வல்லிதின் – விரைந்து சென்று – பின்னத்தூரார் உரை, ச.வே.சு உரை, கு,வெ.பா உரை, இராமையா பிள்ளை உரை

– வல்லிதின் – வற்புறுத்தி – ஔவை.சு.து உரை

– வல்லிதின் – வலியச் சென்று – புலியூர்க் கேசிகன் உரை

சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப
வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ – நற் 120/4,5

சிறிய மோதிரத்தை இறுக்க அணிந்திருந்த மெல்லிய விரல்கள் சிவந்துபோகும்படி,
வாளை மீனின் ஈரமான நீண்ட துண்டை சிரமப்பட்டு நறுக்கி

– வல்லிதின் – வல்லபடி, பல்வேறு வகையாக – ஔவை.சு.து.உரை, விளக்கம்

– வல்லிதின் – மிகவும் சிரமப்பட்டு – புலியூர்க் கேசிகன் உரை

– வல்லிதின் – உண்ணும் வகையில் – ச.வே.சு உரை, கு,வெ.பா உரை

– வல்லிதின் – திறம்பட – இராமையா பிள்ளை உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *