சொல் பொருள்
1. (வி) (ஒன்றனைச் செய்ய) இயலு, (ஒன்றில்) வலிமையுள்ளவனாயிரு,
2. (பெ) சூதாடு கருவி,
சொல் பொருள் விளக்கம்
(ஒன்றனைச் செய்ய) இயலு, (ஒன்றில்) வலிமையுள்ளவனாயிரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be able, dice
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்கு சால் அவிழ் நெடும் குழி நிறைய வீசும் மாஅல் யானை ஆஅய் – அகம் 152/19-21 கல்வியில் வல்லுநராயினும், வல்லுநர் அல்லாராயினும் பரிசில் நாடி வருபவர்க்கு மிடாச் சோற்றை மண்டையின் நெடிய குழி நிறையும்படியாக அளிக்கும் பெரிய யானைகளையுடைய ஆய் என்பானது நரை மூதாளர் அதிர் தலை இறக்கி கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய வரி நிற சிதலை அரித்தலின் – அகம் 377/7-9 நரையினையுடைய முதியோர் நடுங்கும் தம் தலையைக் கவிழ்த்து தமது கவர்த்த மனத்திலே இருத்தி சூதுவிளையாடும் சூதாடும் தரையின் அழகுகெட வரிகள் பொருந்திய நிறமுடைய கறையான் அரித்தமையால் – வல்லு – சூது கருவி; ஈண்டுச் சூதாடுமிடத்திற்கு ஆயிற்று. – வே.நாட்டார் உரை, விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்