1. சொல் பொருள்
1. (வி) 1. சூழ், 2. கோணு, 3. சுற்றிவா, 4. சுற்றிச்சூழ், 5. வரை, எழுது, 6. கோணச்செய், 7. சுற்றிக்கொள், போர்த்து, 8. முற்றுகையிடு, 9. கைகளால் சுற்றி அணை,
2. (பெ) 1. சங்கு என்ற கடல் நத்தை, 2. சங்கு என்ற கடல் நத்தையின் ஓடு, 3. வளையல், 4. எலி முதலியவற்றின் பொந்து,
2. சொல் பொருள் விளக்கம்
சூழ்,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
surround, bend, curve, hover round; walk around, close in, paint, delineate, bend, inflect, wear, put on enclosing the body, besiege, embrace
conch, tropical marine gastropod of the genus Strombus having a brightly-colored spiral shell with large outer lip
conch shell, bangles, Rat-hole, burrow;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – திரு 293 இருண்ட நிறத்தையுடைய கடல் சூழ்ந்த (இந்த)உலகத்தில் வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 110 வளைந்த கொம்பினையுடைய பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும் வையகம் முழுதுடன் வளைஇ பையென என்னை வினவுதியாயின் – புறம் 69/7,8 உலகம் எல்லாவற்றையும் சுற்றிவந்து, பின்னை என்னை மெல்ல வறுமை தீர்ப்போர் யார் எனக் கேட்கின்றாயாயின் நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் – பெரும் 115,116 நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களைப் (வேறு)போக்கிடம் இல்லாதவாறு வளைத்து(ப் பிடித்து), கடுமையான கானவர் (அக்)காட்டில் (கூட்டாஞ்சோற்றைக்)கூடியுண்ணும் செம்பு இயன்று அன்ன செய்வுறு நெடும் சுவர் உருவ பல் பூ ஒரு கொடி வளைஇ கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 112-114 செம்பினால் பண்ணினாற்போன்ற (சிறப்பாகச்)செய்தலுற்ற நெடிய சுவரில், வடிவழகுகொண்ட பல பூக்களையுடைய ஒப்பில்லாத கொடியை வரைந்து, கருவோடு பெயர்பெற்ற காட்சிக்கினிய நல்ல இல் (கர்ப்பக் கிருகம் – கருவறை) கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து ஒடுங்கினள் – அகம் 86/21,22 முதுகினை வளைத்து கோடிப்புடவைக்குள் ஒடுங்கிக்கிடந்தாள் முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர் – அகம் 136/20,21 கசங்காத புத்துடையால் உடல் முழுவதும் போர்த்தியதால் மிக்க புழுக்கத்தை எய்திய நினது பிறைபோன்ற நெற்றியில் அரும்பிய வியர்வை வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ அரும் சமம் கடந்து படிமம் வவ்விய – அகம் 149/11,12 வளம் பொருந்திய முசிறி என்னும்பட்டினத்தை ஆரவாரம் மிக முற்றுகையிட்டு அரிய போரை வென்று அங்குள்ள பொற்பாவையைக் கவர்ந்துகொண்ட வன்கணாளன் மார்பு உற வளைஇ இன் சொல் பிணிப்ப நம்பி – அகம் 153/5,6 கொடுமையுடைய தலைவன் மார்போடு சேர்த்து அணைத்து இனிய சொல்லாலேகட்டிவிட, அதனை விரும்பி துனி கண் அகல வளைஇ கங்குலின் இனிதின் இயைந்த நட்பு – அகம் 328/6,7 தமது வருத்தம் தம்மிடத்தினின்றும் நீங்க ஆகத்தைத் தழுவி, இரவெல்லாம் இனிமையாகப் பொருந்திய நட்பினை பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின் – மது 375 பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில் வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறை – அகம் 150/7 வாள் போன்ற கொம்பினையுடைய சுறா மீன் இயங்கும் சங்குகள் மேயும் பெரிய துறையையுடைய வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120 கொம்பு மிக்கு ஒலிப்பவும், வெள்ளிய சங்கு முழங்கவும் விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு வயிரும் வளையும் ஆர்ப்ப – முல் 91,92 வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி கொம்பும் சங்கும் முழங்க வளை நரல வயிர் ஆர்ப்ப – மது 185 சங்கம் முழங்க, கொம்புகள் ஒலிக்க, வளை கை கிணை_மகள் வள் உகிர் குறைத்த குப்பை வேளை உப்பு இலி வெந்ததை – சிறு 136,137 வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை, அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை – மது 316 அரம் கீறியறுத்த இடம் நேரிதாகிய விளங்கும் வளையல்களும் வல்லோன் வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை அகன் தொடி செறித்த முன்கை ஒண் நுதல் – நற் 77/8-10 வளைசெய்வதில் வல்லவன் தன் வாள் போன்ற அரத்தால் அராவிச் செய்த நன்றாகப் பொருந்திய நேரிய ஒளிமிகுந்த வளையலையும், அகன்ற தொடியையும் செறித்த முன்கையையும், ஒளிவிடும் நெற்றியையும் வளை என்ற சங்கினை அரம் கொண்டு அறுத்துச் செய்வதால் பெண்கள் கைகளில் அணியும் வட்டமான அணி வளையல் எனப்பட்டது. இல் எலி வல்சி வல்வாய் கூகை கழுது வழங்கு யாமத்து அழிதக குழறும் வளை கண் சேவல் வாளாது மடியின் – அகம் 122/13-15 இல்லிலுள்ள எலியை இரையாகக் கொண்ட வலிய வாயினதான கூகையின் சேவல் பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவுண்டாகக் குழறும் பொந்தில் வாழும் அச் சேவல் வறிதே உறங்கின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்