சொல் பொருள்
(பெ) 1. வார், 2. விசைவார், 3. கடிவாளம்,
சொல் பொருள் விளக்கம்
வார்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
lash, thong, strip of leather that is attached to the bridle, bridle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல் சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ கோள் நாய் கொண்ட கொள்ளை கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே – நற் 82/7-11 சிறிய கண்களையுடைய பன்றியின் மிக்க சினத்தையுடைய ஆண் சேறு பட்ட கரிய பக்கம் புழுதி படிந்து அதன் நிறத்தைப் பெற சுருக்குவார் வைத்த வெறும் பிளப்பில் வீழ்ந்துபட்டதாக, வாரை அழித்து மொய்த்தனவாகக் கொன்று நாய்கள் பற்றிக்கொண்ட மிகுதிப்பட்ட தசைகளை கானவர் சென்று அவற்றை விலக்கிப் பன்றி இறைச்சியைக்கொணரும் சிறுகுடியின்கண்ணே – பின்னத்தூரார் உரை. வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ – ஐங் 486/4 குதிரைகளின் விசைவாரினை ஆராய்ந்து கையிற்கொண்டு செலுத்துவாயாக, பாகனே! – வள்பு– குதிரை வாயின் வடம்; கடிவாளத்தோடு இணைத்த விசை வார். குதிரையை விரையச் செலுத்த வேண்டின் பாகன் இவ்வாரினைக் கையிற்கொண்டு அடிக்கடி விசைப்பது வழக்கம் – பொ.வே.சோ உரை – விளக்கம் – வள்பு, குதிரையைச் செலுத்தும் விசைவார் – ஔவை.சு.து.விளக்கம் வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய – அகம் 64/3 கூறுபாடமைந்த வனப்பினையுடைய கடிவாள வாரினை நீ ஆராய்ந்து கொள்ள – நாட்டார் உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்