சொல் பொருள்
(பெ) வண்மையுடையவர்,
சொல் பொருள் விளக்கம்
வண்மையுடையவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Generous, liberal persons
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வள்ளியோர் படர்ந்து புள்ளின் போகி நெடிய என்னாது சுரம் பல கடந்து வடியா நாவின் வல்லாங்கு பாடி பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி ஓம்பாது உண்டு கூம்பாது வீசி வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை – புறம் 47/1-6 வண்மையுடையோரை நினைத்து பழுமரம் தேரும் பறவை போலப் போகி நெடிய என்று கருதாது அரிய வழி பலவற்றையும் கடந்து திருந்தாத நாவால் தம் வல்லபடி பாடி ஆண்டுப் பெற்ற பரிசிலால் மகிழ்ந்து சுற்றத்தை ஊட்டி தாமும் பொருளைப் பாதுகாவாது உண்டு, உள்ளம் கூம்பாமல் வழங்கி தம்மைப் புரப்போராற் பெறும் சிறப்பு ஏதுவாக வருந்தும் இப் பரிசிலால் வாழும் வாழ்க்கை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்