சொல் பொருள்
(பெ) ஆண் ஓந்தி,
சோப்புக் கட்டி
சொல் பொருள் விளக்கம்
சோப்புக் கட்டியைச் சவர்க்காரம் என்பது பொது வழக்கு. அது, வழ வழப்பாக இருப்பது கொண்டு வழலை என்பது குமரி மாவட்ட வழக்காகும். இதனை அரிய ஆட்சிச் சொல்லாகக் கொண்டார் பாவாணர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
male chameleon
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேனில் ஓதி பாடு நடை வழலை வரி மரல் நுகும்பின் வாடி – நற் 92/2,3 வேனிற்காலத்து ஓந்தியின் வருத்தமான நடையைக்கொண்ட ஆண் ஓந்தி வரிகள் உள்ள பெருங்குரும்பையின் குருத்துப்போல வாடி, – ஓந்தி ஓதி எனவும், அதன் ஆண் வழலை எனவும் வழங்கும் – ஔவை.சு.து.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்