சொல் பொருள்
(வி.எ) 1. வழுவாமல், நெறிபிறழாமல், 2. வழுவாமல், தவறாமல்,
சொல் பொருள் விளக்கம்
வழுவாமல், நெறிபிறழாமல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
without erring, without going astray
unfailingly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் நிறை_வயின் வழாஅது நின் சூலினரே – பரி 5/46,47 குற்றமற்ற கற்பினையுடைய அந்த முனிவர்களின் மனைவியர் தம் கற்பினில் வழுவாமல் உன்னைக் கருக்கொண்டனர்; இரும் பறை இரவல சேறி ஆயின் தொழாதனை கழிதல் ஓம்பு-மதி வழாது வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறே ———————- ———————– வில் உமிழ் கடும் கணை மூழ்க கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே – புறம் 263/2-8 பெரிய பறையினையுடைய இரவலனே! நீ போகின்றாயாயின் தொழாதவனாய்க் கடந்து செல்லுதலைத் தவிர்ப்பாயாக, (தொழுது சென்றால்) இடைவிடாமல் வண்டுகள் மேம்பட்டு வாழும் இந்தக் கொடிய வழி; ——————- —————— வில் உமிழ்ந்த விரைந்த அம்புகளில் மூழ்கி கரையைக் கொல்லும் புனலின் அணை போல எதிர்நின்று விலக்கியவனின் நடுகல்லை,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்