சொல் பொருள்
(பெ) தவறு, தப்பு,
சொல் பொருள் விளக்கம்
தவறு, தப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
error, mistake, fault
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவன் எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் வாழ கண்டன்றும் இலமே – புறம் 61/15-17 அவனுடைய கணைய மரத்தோடு மாறுபடும் திணிந்த தோளைத் தப்பில்லாமல் மாறுபட்டோர் வாழக் கண்டதும் இல்லை – வழு இன்று மலைதலாவது – வெளிப்பட நின்று மலைதல் -ஔவை.சு.து.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்