சொல் பொருள்
1. (வி) 1. விலகு, தள்ளி அமை, 2. நழுவு,
2. (பெ) கொழுப்பு, பிறந்த கன்று போன்றவற்றின் மேலுள்ள மெல்லிய ஏடு,
சொல் பொருள் விளக்கம்
விலகு, தள்ளி அமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be apart, slip, mucus as on fat or on new born calf
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாதிரம் விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 72-75 திசைகள்(எல்லாவற்றிலும்) விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு, (நாட்டப்பட்ட)இரண்டு கோல்களின் நிழல்கள் விலகியிராமல் ஒன்றும்வகையில், (கிழக்கிலிருந்து)மேற்கே செல்வதற்காக, ஒரு பக்கத்தைச் சாராத (உச்சியில் இருக்கும்)நண்பகல் நேரத்தில் தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து கோள் வழுக்கி தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது மீளும் புகர் ஏற்று தோற்றம் காண் – கலி 104/46-48 தன் தோள் வலிமையினால் துணிந்த பிடிப்பு நெகிழ, காளையின் கழுத்தை விட்டுக் கைகள் தள்ளப்பட உடல் தளர்ந்து தான் பிடித்த பிடி வழுக்கித் தன் முன்னே வீழ்ந்தவனை முட்டித்தள்ளாமல், திரும்பிச் செல்லும் புள்ளிகளையுடைய காளையின் தோற்றத்தைப் பார்! நிணம் பொதி வழுக்கில் தோன்றும் மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றே – ஐங் 207/3,4 நிணத்தைப் பொதிந்துவைத்து மூடியுள்ள மெல்லிய ஏடைப் போல் தெரிகிறது, மேகங்களை உச்சியில் கொண்டுள்ளன, அவரின் மணிபோன்ற நெடிய குன்று – வழுக்கு – கொழுவிய ஊன் தடி மேல் வெண்ணெய் போலப் படிந்து தோன்றுவது -ஔவை.சு.து.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்