வழுதி என்பதன் பொருள்பாண்டியரின் குடிப்பெயர், பாண்டிய அரசர்.
1. சொல் பொருள்
(பெ)பாண்டியரின் குடிப்பெயர், பாண்டிய அரசர்.
2. சொல் பொருள் விளக்கம்
இது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று. கூடல், மருங்கை, கொற்கை ஆகிய இடங்களில் இருந்துகொண்டு வழுதி அரசர்கள் ஆண்டுவந்தனர்.
வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள்
- காய்சினவழுதி – முதற்சங்கத்தைக் கூட்டிய முதல்வன்.
- பெருவழுதி நாணயம் – இதில் பொறிக்கப்பட்ட மன்னர்.
- மாங்குளம் கல்வெட்டுகளிலுள்ள கடலன்வழுதி
- பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
- கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர்வழுதி
- பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
- பாண்டியன் மாறன்வழுதி
- கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி
- கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
- பெருவழுதி
- குறுவழுதி
- நல்வழுதி
- அண்டர்மகன் குறுவழுதியார்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a poetical epithet of the Pandya Kings
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
அரண் பல கடந்த முரண் கொள் தானைவழுதி – நற்றிணை 150
பசும்பூண்வழுதி மருங்கை அன்ன என் – நற் 358/10 - மருங்கூர் அரசன் அரண் பல கடந்த, முரண் கொள் தானை, வாடா வேம்பின், வழுதி – அகம் 93/9 - கூடல் அரசன் நல்தேர்வழுதி கொற்கை முன்துறை – அகம் 130/11 - கொற்கை அரசன் நல்தேர்வழுதி - அகநானூறு 204 ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை, வெல் போர் வழுதி - அகநானூறு 312 பெரும்பெயர்வழுதி - அகநானூறு 315 கரும் கை ஒள் வாள் பெரும்பெயர்வழுதி நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் - புறநானூறு 3 பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி பெரும்பெயர் வழுதி என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இரும்பிடர்த் தலையார் என்னும் புலவர் புறநானூற்றில் இவனைப் பாடியுள்ளார் . பொன் ஓடைப் புகர் அணி நுதல் துன் அருந்திறல் கமழ் கடாஅத்து எயிறு படையாக எயில் கதவு இடாஅக் கயிறு பிணி கொண்ட கவிழ் மணி மருங்கின் பெருங்கை யானை இரும்பிடர்த் தலை இருந்து மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர்வழுதி - புறநானூறு 3 நீர் மிகின், சிறையும் இல்லை; தீ மிகின், மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை; வளி மிகின், வலியும் இல்லை; ஒளி மிக்கு அவற்று ஓர் அன்ன சினப்போர்வழுதி - புறநானூறு 51 - பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து - புறநானூறு 52 - பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. மாறன் வழுதி சங்ககால பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பன்னாடு தந்த மாறன் வழுதி என்ற பட்டத்தினைப் பெற்ற மாறன் வழுதி நற்றிணை நூலினை தொகுத்த பெருமையினை உடையவனும் ஆவான்.குறுந்தொகையில் உள்ள 270 ஆம் பாடலினைப் பாடிய பெருமையினையும் உடையவனாவான். பாண்டியன் மாறன் வழுதி அரசனாகவும், புலவராகவும் விளங்கியவன். இவனது பாடல்கள் இரண்டு உள்ளன. இவன் அரசனாகவும் புலவனாகவும் விளங்கியவன். தாள் தோய் தட கை தகை மாண் வழுதி வல்லை மன்ற நீ நயந்து அளித்தல் - புறநானூறு 59 - பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். அண்ணல் யானை வழுதி கண்மாறு இலியர் என் பெரும் கிளை புரவே - புறநானூறு 388 - தென்னவன் மறவன் எனப் போற்றப்படும் சிறுகுடிகிழான் பண்ணன் புடை வரு சூழல் புலம் மாண்வழுதி மட மயில் ஓரும் மனையவரோடும் - பரி 19/20,21 கடல் போல் தானை கலிமாவழுதி வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறை - அகம் 204/2,3
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்