சொல் பொருள்
நிலையின் மேல் போடப்பட்ட பலகை
வாங்குதல், தாங்குதல், இரண்டும் பொருள் வைக்கும் தட்டு என்னும் பொருளில் வழங்குவனவாம்.
சொல் பொருள் விளக்கம்
‘வாங்கி’ என்பது எச்சம் போல் தெரிந்தாலும் வாங்குதல், வளைதல் பொருளில் வாராமல் நிலையின் மேல் போடப்பட்ட பலகையைக் குறிப்பதாகத் திருச்செங்கோடு வட்டார வழக்கில் உள்ளது. கம்பால் அமைந்த அதனைக் கம்பை என்பது முகவை வழக்கு. தாங்குதலாக அமைதலால் தாங்கி என்பது நெல்லை வழக்கு. வாங்குதல், தாங்குதல், இரண்டும் பொருள் வைக்கும் தட்டு என்னும் பொருளில் வழங்குவனவாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்