வாட்டாறு என்பது ஓர் ஊர், ஓர் ஆறு
1. சொல் பொருள்
(பெ) ஓர் ஊர், ஓர் ஆறு
2. சொல் பொருள் விளக்கம்
வாட்டாற்றில் கீழ்நீர் மீன் தருகிறதாம். மேல்நீர் மலர் தருகிறதாம். விளைவயலெங்கும் பறவைகள். பறையொலி கேட்டு அவை பறந்தோடும் அழகு.
கி.பி. எட்டாம் நூற்றாண்டு நம்மாழ்வார் வாட்டாற்றுப் பெருமாளைப் பாடிய பாடல் திவ்விய பிரபந்தத்தில் உள்ளது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a city in sangam period
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கீழ்நீரால் மீன்வழங்குந்து
மீநீரால் கண்ணன்ன மலர்பூக் குந்து
கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து
நெடுநீர்தொகூஉம் மணல்தண்கால் 5
மென்பறையாற் புள்இரியுந்து
நனைக்கள்ளின் மனைக்கோசர்
தீந்தேறல் நறவுமகிழ்ந்து
தீங்குரவைக் கொளைத்தாங்குந்து
உள்ளிலோர்க்கு வலியாகுவன் 10
கேளிலோர்க்குக் கேளாகுவன்
கழுமிய வென்வேல் வேளே
வளநீர் வாட்டாற்று எழினி யாதன்
கிணையேம் பெரும
கொழுந்தடிய சூடு என்கோ?
– புறம் 396/13
நீர் வளம் சிறந்த வாட்டாறு என்னும் ஊர்க்கு உரியனாகிய எழினியாதன்
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்
இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே (திவ்வியப் பிரபந்தம் பாடல் எண் 3954)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்