சொல் பொருள்
(பெ) மாறுபாடு, மனக்கோணல்,
சொல் பொருள் விளக்கம்
மாறுபாடு, மனக்கோணல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
crookedness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட பரும குதிரையோ அன்று பெரும நின் ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர் வாதத்தான் வந்த வளி குதிரை – கலி 96/33-36 முறையாக மணம் செய்து அறவழியில் வந்த மேகலையாகிய சேணம் தரித்த காமக்கிழத்தியாகிய குதிரையும் இல்லை! பெருமானே! உன் அந்நியனான பெரும்பாணன் தூது போக அங்கே ஒரு மனக்கோணலால் வந்த காற்றாய்ப் பறக்கும் குதிரை! – வாதம் மாறுபாடு – நச்.உரை, பெ.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்