சொல் பொருள்
(பெ) வாதிடுபவன்,
சொல் பொருள் விளக்கம்
வாதிடுபவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one who argues
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மேதி அன்ன கல் பிறங்கு இயவின் வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி இரும்பு கவர்வுற்றன பெரும் புன வரகே – மலை 111-113 எருமையைப் போன்ற பாறைகள் மிகுந்திருக்கும் வழியில், வாதிடுபவனின் கைகளைப் போன்று கிளைத்துப்பிரிந்த கதிர்கள் (முற்றியதால்)தலைவணங்கி, (இரும்பாலாகிய)அரிவாள் வசப்பட்டன(=அரிதலுற்றன) பெரிய கொல்லைக்காட்டின் வரகுகள்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்