சொல் பொருள்
(பெ) 1. ஆகாயம், 2. மேகம், 3. மழை,
சொல் பொருள் விளக்கம்
1. ஆகாயம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sky, cloud, rain
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் – அகம் 11/1 ஆகாயத்தில் ஊர்ந்தேகும் விளங்கும் ஒளியினதாகிய ஞாயிற்று மண்டிலம் கருவி வானம் கடல் கோள் மறப்பவும் – பொரு 236 கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும் வானம் வாய்த்த வளம் மலை கவாஅன் – சிறு 84 மழை பொய்க்காத செல்வத்தையுடைய மலைப்பக்கத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்