சொல் பொருள்
(பெ) 1. தேவர் உலகு, 2. வானம், 3. மழை, 4. மேகம், 5. அழகு,
சொல் பொருள் விளக்கம்
1. தேவர் உலகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
celestial world, sky, rain, cloud, beauty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117 தேவருலகு மகளிர்க்கு மணமாலை சூட்ட வான் பொரு நெடு வரை வளனும் பாடி – சிறு 128 வானத்தைத் தொடும் நெடிய மலையின்கண் உள்ள செல்வத்தையும் பாடி, வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த – பெரும் 107 மழை பெய்யாதிருக்கும் காலத்தில் நீரை விரும்பித் தோண்டிய வான் முகந்த நீர் மலை பொழியவும் – பட் 126 மேகம் (தான்) முகந்த நீரை மலையில் சொரியவும் வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும் – கலி 103/14 அழகிய ஒளிர்வு பரந்த வெள்ளைப் புள்ளிகளைக் கொண்ட காளையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்