Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வாசல்,  2. வழி

சொல் பொருள் விளக்கம்

வாசல், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

gate, doorway

source

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 356

வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாசல்,

வாயிலொடு புழை அமைத்து
ஞாயில்தொறும் புதை நிறீஇ – பட் 287,288

பெரிய வாசல்களுடன் சிறு வாசல்களையும் உண்டாக்கி,
கோட்டை முகப்புத்தோறும் (மறைந்தெறியும்)அம்புக்கட்டுக்களைக் கட்டிவைத்து

வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்
ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய
கேளிர் போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்ப கூறி – பொரு 72-75

வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே,
ஒரு பாட்டினை யான் பேணிப் பாடி முடிக்கும் முன்னே – (தன்னோடு)பொருந்திய
உறவினரைப் போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி,
(தான்)உபசரிப்பதற்கு வழியாகிய இரப்பினையே (யான்) எப்பொழுதும் விரும்புமாறு (முகமன்)பொழிந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *