சொல் பொருள்
வாயைப்பிடுங்குதல் – சொல்லை வருவித்தல்
சொல் பொருள் விளக்கம்
பல்லைப் பிடுங்குதல் தெளிவாக உள்ளது. வாயைப் பிடுங்குதல் எப்படி? வாய் என்பது வாய்ச் சொல்லைக் குறிக்கிறது. என்னென்னவோ சொல்லி வாயை மூடியிருப்பவரிடமிருந்தும் சில செய்திகளை வாங்கிவிடக் கூடிய திறமையாளர்கள் உளர். வாயை வலிந்து பிடுங்குவது எதற்காக? அதனைப் பல பேரிடம் பரப்புதலுக்கும், அச் சொல்லைக் கொண்டே சொல்லியவர்களை மடக்கித் தாம் இன்பப்படுவதற்குமாம். “சும்மா இருந்த என் வாயைப் பிடுங்கி என்னையே குத்திக் காட்டுகிறாய். உன்னை வெற்றிலை வைத்து அழைத்துக் கேள் என்றேனா” என்று குத்திக் காட்டுதல் குத்துண்டவர் செய்வதாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்