சொல் பொருள்
இறந்தவர்க்குச் செய்யும் கடமைகளுள் ஒன்று வாய்க்கரிசி போடல் என்பது
சொல் பொருள் விளக்கம்
இறந்தவர்க்குச் செய்யும் கடமைகளுள் ஒன்று வாய்க்கரிசி போடல் என்பது. இறந்தவர் பயன்படுத்திய பொருள்களைக் கடைசி முறையாகப் படைப்பது என்னும் வகையில் நேர்ந்த வழக்கு அது. ஆனால் உழையாமல் உண்பவர்க்கோ வெறுப்புடன் சோறு படைக்கப்படுபவர்க்கோ தரும் சோற்றைச் சோறு எனச் சொல்வது இல்லை. வெறுப்பினால், “உனக்கு வாய்க்கரிசி போடுகிறேன்” என்பர். வாய்க்கரிசி, கடைசிச்சோறு, ஒவ்வொரு நாளும் வைதுகொண்டே வாய்க்கரிசி போட்டால் முதலேது முடிவேது?
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்